ரூ.700 கோடியை நெருங்கும் காந்தாரா: சாப்டர் 1 வசூல்

ரூ.700  கோடியை நெருங்கும் காந்தாரா: சாப்டர் 1 வசூல்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வசூல் இதுவரை ரூ.700 கோடியை நெருங்கியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்த ‘காந்தாரா’ படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்தது. கன்னடத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து இதன் முதல் பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் உருவானது. அக்.2-ம் தேதி வெளியான இதில், ருக்மணி வசந்த், ஜெயராம், சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளிலிருந்தே இந்தப் படம் வசூல் குவித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியான 13 நாளில் உலகம் முழுவதும் இதுவரை ரூ.675 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜமவுலியின் பாகுபலி, ஷங்கரின் 2.0 ஆகிய படங்களின் வசூலை முந்தியுள்ளது. விரைவில் இந்தப் படம் ரூ.700 கோடி வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.