கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

கால்பந்து தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் அணி 2 இடங்களை இழந்து 136-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் தரவரிசையில் இந்திய அணி மோசமான வகையில் சரிவை சந்தித்துள்ளது. 2027-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக தலா ஒரு டிரா, தோல்வியை பதிவு செய்ததால் தரவரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடைசியாக இந்திய அணி தரவரிசையில் கடந்த 2016-ம் ஆண்டு 137-வது இடத்தை பிடித்திருந்ததே பெரிய அளவிலான சரிவு ஆகும்.