288 ரன்களை விரட்டிய இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோல்வி - மகளிர் உலகக் கோப்பை

288 ரன்களை விரட்டிய இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோல்வி - மகளிர் உலகக் கோப்பை

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 4 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் எமி ஜோன்ஸ் 58, ஹீதர் நைட் 109, கேப்டன் நேட் சீவர் பிராண்ட் 38 ரன்கள் எடுத்தனர்.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை இந்தியா விரட்டியது. இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மனிதனா 88, கேப்டன் ஹர்மன்பிரீத் 70, தீப்தி சர்மா 50, ஹர்லீன் தியோல் 24 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

முக்கிய கட்டத்தில் ஸ்மிருதி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் 4 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.