பாக், ஆப்கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தெஹ்ரிக்-இ-தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு எல்லையில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது.
இதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்கள் 58 பேர் இறந்தனர். இந்நிலையில், காந்தகார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கன் மக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் பாக். வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.