தங்கம் விலை கடும் சரிவு... நகைபிரியர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை கடும் சரிவு... நகைபிரியர்கள் மகிழ்ச்சி

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்திருப்பது நகைபிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று மிகப்பெரிய குறைவை கண்டுள்ளது. அதாவது, நேற்று (டிச.15) ரூ.1.20 லட்சம் என்ற வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் இன்று 22 கேரட் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ரூ. 1,320 குறைந்து ரூ.98,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலை இன்று, கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.211-க்கும், ஒரு கிலோ ரூ.2,11,000-க்கும் விற்பனை ஆகிறது.