சென்னையில் தங்கம் விலை ரூ.1,120 உயர்வு: மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 என உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த டிச.27-ல் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் விலை குறைந்து வந்த நிலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.99,520-க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலை: சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.4,000 உயர்ந்து, ரூ.2,60,000-க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.90-ஐ நெருங்கி வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை மீண்டும் கூடியுள்ளது. . கடந்த நான்கு நாட்களில் 5ஆயிரம் வரை குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிப்பதால் நகை வாங்குவோர் கலக்கத்தை அடைந்துள்ளனர்.