மரண அடி... 32 பந்துகளில் சதம்.... அபிசேக் சர்மா சாதனை
32 பந்துகளில் சதமும், 12 பந்துகளில் அரைசதமும் விளாசி, டி20 கிரிக்கெட்டில் சாதனை வீரர்கள் பட்டியலில் அபிசேக் சர்மா இடம்பிடித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணியும், பெங்கால் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 310 ரன்களை குவித்தது.
அந்த அணிக்காக விளையாடிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிசேக் சர்மா 52 பந்துகளில் 148 ரன்களை சேர்த்தார். அதாவது ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய அவர், முதல் 12 பந்துகளில் அரைசதமும், 32 பந்துகளில் சதமும் விளாசினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அதிவேக சதம் விளாசிய 2வது இந்திய வீரர், குறைந்த பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3வது இந்திய வீரர் எனும் சாதனையை அபிசேக் சர்மா படைத்தார்.