பகலிரவு டெஸ்ட்: 10வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஆர்சர் புதிய சாதனை

பகலிரவு டெஸ்ட்: 10வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஆர்சர் புதிய சாதனை

ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரில் பகலிரவு ஆட்டத்தில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆர்சர் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இப்போட்டி நடக்கிறது. இதில் முதலாவது ஆட்ட நேர முடிவில் 10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த 2 பேரும் 61 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இது பகலிரவு டெஸ்டில் 10வது விக்கெட்டுக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர்கள் டாம் பிளன்டல், பிளேர் ஆகியோர் 59 ரன்கள் குவித்ததே 10வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்று சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஆர்சர் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.