மோந்தா புயல் எதிரொலி: சென்னையில் புறப்படும் 9 விமானங்கள் ரத்து! முழு லிஸ்ட்

மோந்தா புயல் எதிரொலி: சென்னையில் புறப்படும் 9 விமானங்கள் ரத்து! முழு லிஸ்ட்

: மோந்தா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் மற்றும் ஆந்திராவில் இருந்து சென்னை வரும் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று மாலை கரையை கடக்கவுள்ளது.

இந்த புயல் காரணமாக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை - ஆந்திராவுக்கு வந்து செல்லும் 9 விமானச் சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவின் விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் 3 விமானங்கள் என மொத்தம் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்தான விமானங்கள்

இதேபோல, இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.55 மணிக்கு சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய மூன்று விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை மற்றும் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நெருங்குவதால்சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் சற்று தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் தங்களது விவரப் பயணங்களை சரிபார்த்து விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்து பயணத்திட்டங்களை மேற்கொள்ளும்படியும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.