இன்றைய ராசிபலன் @ 12 டிசம்பர் 2025
மேஷம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர். மதிப்பு உயரும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவை பெறுவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயல்வீர்.
கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.
கும்பம்: திட்டமிட்ட வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாட்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும். லாபம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக் காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தை விரிவு படுத்தும்விதமாக வங்கிக் கடனுதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.