ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியில் கோபிநாத், அவரது மனைவி சிவகாமி வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகு தியை சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம் ரயில்வேயில் டிடிஆர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.28 லட்சம் பெற்றுள்ளனர்.
மேலும் போலியாக ரயில்வே துறையில் பணித்தேர்வுக்கான ஓர் ஆர்டர் காப்பியை இ-மெயில் மூலம் மனுதாரருக்கு அனுப்பி, சிவகாமி டிடிஆர் வேலைக்கான சீருடை, ஒரு டேப், ஒரு கருப்பு பேக் ஆகியவற்றை மனுதாரரிடம் கொடுத்து பணியில் சேரும் தேதியை விரைவில் கூறுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வேலை வாயப்பு மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய் வாளர் சிவகுருநாதன் தலை மையிலான குழு வாலாஜா முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கோபி நாத், சிவகாமியை கைது செய்தனர். அவர்கள் இருவரையும் பூந்தமல்லி நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.