“மோடி தனது பொறுப்பை அடிக்கடி மறந்து விடுகிறார்” - பீகாரில் பிரதமரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

“மோடி தனது பொறுப்பை அடிக்கடி மறந்து விடுகிறார்” - பீகாரில் பிரதமரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

பீகார் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் திமுகவினர் துன்புறுத்துவதாக தெரிவித்திருந்த பிரதமர் மோடி பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் வருகிற நவம்பர் மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பாஜக சார்பில் பீகாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக நேற்று அங்கு சென்றிருந்தார்.

முசாபர்பூரில் பேசிய அவர் தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் பேசியபோது, “பீகாரின் கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும். மாநில வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முன்னுரிமை அளிக்கின்றன. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் ஒருபோதும் பீகாரை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அவர்களது ஆட்சியில் ஊழல் செழித்து வளர்ந்தது. ஏழைகளின் உரிமைகள் சூறையாடப்பட்டன. இந்தியா கூட்டணி கட்சிகளால் பீகாருக்கு ஒருபோதும் நல்லது செய்ய முடியாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுவினர் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்துகின்றனர்” என கூறியிருந்தார்.

ஒடிசா, பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க., வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துகின்றனர். இதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் இடமாக இந்தியா உள்ளது. அதில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் இடையே பகையை உண்டாக்குவது என பாஜக நடந்து கொள்கிறது. இதுபோன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும், பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.