திமுக தேர்தல் அறிக்கை: முழுவீச்சில் இறங்கிய டீம்! இன்று App அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

திமுக தேர்தல் அறிக்கை: முழுவீச்சில் இறங்கிய டீம்! இன்று App அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

திமுகவின் தேர்தல் அறிக்கை செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை திமுக தலைமை உருவாக்கி உள்ளது. இதனை முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை அமைத்தது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், டிகேஎஸ் இளங்கோவன், எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்), சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இந்தக் குழு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் அதிரடியாக இறங்கியுள்ளது.

வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள திமுக, இதற்காக ஒரு பிரத்யேக மொபைல் செயலியை இன்று அறிமுகம் செய்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் இந்த செயலி மூலம், மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, இந்த செயலி வழியாக வரும் கருத்துகளை ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த முயற்சி, தேர்தல் களத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.