தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

புத்தாண்டு பிறந்த முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தொடர்ச்சியாக 8 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.106,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,090க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 88,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கும், கிலோவுக்கு ரூ.4000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.