ஒரே நாளில் புதிய உச்சம்.. தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை

வாரத்தின் முதல்நாளான நேற்று காலை மாலை என இரண்டு வேளையும் தங்கம் விலை எகிறிய நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரே நாளில் புதிய உச்சம்.. தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றது.

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது.

நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,560க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,570க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770க்கும் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,650க்கும் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ.234க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,34,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.