வைரத்தால் செதுக்கப்பட்ட சமந்தாவின் திருமண மோதிரம் இத்தனை கோடிகளா?
சமந்தாவிற்கு திருமணத்தின்போது அவரது கணவர் ராஜ் நிதிமோர், தாலி கட்டிய கையோடு அம்மன் சந்நிதியில் வைத்தே மோதிரமொன்றை அணிவித்தார். அந்த மோதிரம்தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது.
சமந்தா பகிர்ந்திருந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில், கணவர் ராஜின் கைகளை தன் இரு கரங்களாலும் பற்றியபடி சமந்தா நின்றிருப்பார். சமந்தாவின் கைகள் மட்டுமே தெரியும்படியான அந்த புகைப்படத்தில்தான், அந்த மோதிரம் தெளிவாக தெரிந்தது.
இன்ஸ்டாவில் ‘தி ஜெண்ட்டில்மேன்’ என்ற ஐடி மூலம் பிரபலமான ப்ரியன்ஷு கோயல் என்ற நகைக்கடை உரிமையாளர் ஒருவர் இதுபற்றி வீடியோவொன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சமந்தாவிற்கு அவர் கணவர் திருமணத்தில் அணிவித்த மோதிரத்தின் விலை சுமார் 1.5 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறியுள்ளார்.

மோதிரம் குறித்து அவர் குறிப்பிடுகையில், “இதன் நடுப்பகுதியில் lozenge என சொல்லப்படும் தட்டையான, நீளமான சதுர வடிவிலான ஒரு கட் உள்ளது. வைர நகையான இதில் நடுப்பகுதியில் 2 வெட்டுகளும், சுற்றுப்பகுதிகளில் 8 வெட்டுகளும் வருவதுபோல உள்ளது. பூவின் இதழ்களை மையப்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் இந்த மோதிரம், உண்மையில் அதிக வேலைப்பாடுகளை கொண்டது. மிக மிக நேர்த்தியாக இதை செய்துள்ளனர். குறைந்தபட்சம் இதன் விலை ரூ. 1.5 கோடியாவது இருக்கும்” என்றுள்ளார். தன் குணம் போலவே, தனித்துவமான ஒரு டிசைனை சமந்தா தேர்ந்தெடுத்து மோதிரமாக அணிந்து கொண்டதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள்