கிலோ ரூ.380 வரை விற்பனை: தமிழகத்தில் கோழி இறைச்சி விலை உயர்வு ஏன்?

கிலோ ரூ.380 வரை விற்பனை: தமிழகத்தில் கோழி இறைச்சி விலை உயர்வு ஏன்?

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சியின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் இறைச்சி புரதத் தேவையை, ஈடுகட்டுபவையாக கோழி இறைச்சி இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ந்த சில மாதங்களாக ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.200 என்ற விலையில் இருந்து வந்தது. தற்போது பல மடங்கு அதிகரித்து ரூ.380 வரை எட்டியுள்ளது.

கோழித் தீ தீவனத்தின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அதிகப்படியான இந்த விலையேற்றத்தால், பலரும் இறைச்சியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களும், அசைவ உணவுகளை விலையேற்றி உள்ளனர்.

இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள் கூறும்போது. "கறிக் கோழி பண்ணை விவசாயிகள் கோழிக் குஞ்சுகளை வளர்க்க கூலியாக ரூ.6.50 மட்டும் வழங்குவதை கண்டிக்கும். ரூ.20 வழங்க வலியுறுத்தியும் கடந்த 1-ம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கியிருப்பதால், இந்த விலையேற்றம் என்று சொல்லப்படுகிறது.

இறைச்சி விற்பனை கடைகளில் கோழி இறைச்சி ரூ.320 முதல் ரூ. 360 வரை விற்கப்படுகிறது. தோல் நீக்கிய கோழி இறைச்சி சில இடங்களில் ரூ.380 வரை விற்கப்படுகிறது.

அதேபோல் இந்த விலையேற்றத்தின் காரணமாக மீன் வாங்கி பயன்படுத்தலாம் என நினைத்தால் மத்தி, கட்லா, பாறை உள்ளிட்ட சில ரகங்கள் மட்டுமே விலை குறைந்த நிலை யில் உள்ளன. எஞ்சிய ரக மீன்கள் அதிக விலைக்கு விற்கப் படுவதால், மீன் வாங்கவும் பலரும் விருப்பம் காட்டவில்லை.