‘அகண்டா 2’ ரிலீஸ் ஒத்திவைப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி!

‘அகண்டா 2’  ரிலீஸ் ஒத்திவைப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (டிச.5) வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின், அனைத்து கட்டண பிரீமியர் காட்சிகளும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனையடுத்து பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே, படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, “கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ’அகண்டா 2’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது எங்களுக்கு மிகவும் வேதனையான தருணம். படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும், சினிமா பிரியர்களுக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.

இந்தச் சிக்கலை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். இந்த சிரமத்திற்கு மனதார மன்னிப்பு கோருகிறோம்.

உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. விரைவில் ஒரு நேர்மறையான அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Share.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த punnagaiseithi.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.