'அரசன்' படத்தில் இணையும் முக்கிய நடிகை..? சிம்பு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

'அரசன்' படத்தில் இணையும் முக்கிய நடிகை..? சிம்பு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி நடிக்க, கோவில்பட்டி பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் சிலம்பரசனுடன் கைகோர்த்துள்ளார்.  அவரின் வடசென்னை திரைப்பட கதாபாத்திரங்களை உள்ளடக்கிய இத்திரைப்படத்திற்கு அரசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான இதன் அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அரசனில், விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான படப்பிடிப்பு கோவில்பட்டி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

 இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை அரசனிலும் ஆண்ட்ரியா நடிக்கிறாரா என ரசிகர்கள் ஆவலோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வடசென்னை சந்திரா கதாபாத்திர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை அரசனிலும் ஆண்ட்ரியா நடிக்கிறாரா என ரசிகர்கள் ஆவலோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.