ராதாபுரம் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் முன்னாள் எம்பி விருப்ப மனு

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் முன்னாள் எம்பி விருப்ப மனு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் முன்னாள் எம்பி செளந்தர ராஜன் விருப்ப மனு வழங்கினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் அதிமுகவினர் போட்டி போட்டு விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

அதேபோல், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு, விருப்பம் தெரிவித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் முன்னாள் எம்பியும், நெல்லை அதிமுக புறநகர் மாவட்ட கழக பொருளாளருமான சௌந்தரராஜன் தலைமை கழக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், வைகை செல்வன் ஆகியோரிடம் விருப்ப மனுவை சமர்ப்பித்தார்.

அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் S.மைக்கேல் ராயப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.P.K.செல்வராஜ், வள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பால்துரை வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் லாசர் திசையன்விளை பேரூர் கழகச் செயலாளர் ஜெயக்குமார், பணகுடி பேரூர் கழகச் செயலாளர் லாரன்ஸ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகிலன், வர்த்தகர் அணி செயலாளர் பாரதிராஜா, பணகுடி கவுன்சிலர் டேவிட்ராஜன், மாவட்ட மகளிரணி துணை தலைவி வசந்தி, கமலம் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர்  நம்பிராஜன், வழக்கறிஞர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சுப்புராம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணி பிச்சை, முன்னாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரத்தினவேல்,  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராஜ்குமார்,ஏசுதுரை,  சிவலிங்கம், குமரேசன்,  ஜெரால்டு, பரமேஸ்வரன், அஜித் செட்டிகுளம் கிளை செயலாளர்கள் சுயம்பு துரை, பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.