சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்

சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் 41 நக்​சலைட்​​கள் தங்​களது ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர்.

அடுத்த ஆண்டு மார்ச் இறு​திக்​குள், நக்​சல்​கள் இல்​லாத தேச​மாக நாட்டை உரு​வாக்க மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது. இதைத் தொடர்ந்​து, மாவோ​யிஸ்​டு​கள் மற்​றும் நக்​சல்​களுக்கு எதி​ரான தீவிர தேடு​தல் வேட்​டையை போலீ​ஸாரும், துணை ராணுவப் படை​யினரும் முன்​னெடுத்​துள்​ளனர்.

இது தொடர்​பாக பிஜாப்​பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்​திர குமார் யாதவ் கூறிய​தாவது: சத்​தீஸ்​கரின் பிஜாப்​பூர் மாவட்​டத்​தில் 12 பெண்​கள் உட்பட 41 நக்​சலைட்​​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். அவர்​களில் 32 பேரின் தலைக்கு மொத்​தம் ரூ.1.19 கோடி பரிசுத்​தொகை அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. அவர்​களில் 39 பேர், தெற்கு தெலங்​கா​னா, சத்​தீஸ்​கர் மாநிலங்​களில் செயல்​பட்டு வந்​தவர்​கள். சரணடைந்​தவர்​கள் அரசி​யலமைப்பு மீது நம்​பிக்கை கொண்​டுள்​ள​தாக அறி​வித்​துள்​ளனர்.

790 பேர் சரண்: ஜனநாயக விதி​முறைப்​படி பாது​காப்​பான மற்​றும் கண்​ணி​ய​மான வாழ்க்கை வாழ உறு​திபூண்​டுள்​ள​தாக அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். மாநில அரசின் கொள்​கைப்​படி அவர்​களுக்கு உடனடி ஊக்​கத்​தொகை​யாக ரூ.50 ஆயிரம் வழங்​கப்​படும்.

அரசின் கொள்கை காரண​மாக கடந்த ஜனவரி முதல் பிஜாப்​பூர் மாவட்​டத்​தில் மட்​டும் 790 நக்​சல்​கள் வன்​முறையை கைவிட்டு தேசிய நீரோட்​டத்​தில்​ இணைந்​துள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.