ரேஷன் கடைகளுக்கு 23 நாட்கள் விடுமுறை!. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளுக்கு  23 நாட்கள் விடுமுறை!. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளுக்கு 2026-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026-ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி (வியாழக்கிழமை) – ஆங்கில புத்தாண்டு,

ஜனவரி 15 (வியாழக்கிழமை) – பொங்கல் பண்டிகை,

ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) -திருவள்ளூர் தினம்,

ஜனவரி 17 (சனிக்கிழமை) – உழவர் தினம்

ஜனவரி 26 (திங்கள்கிழமை) – குடியரசுத் தினம்,

பிப்ரபரி 1 (ஞாயிற்றுக்கிழமை) – தைப்பூசம்,

மார்ச் 19 (வியாழக்கிழமை) – தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி)

மார்ச் 21 (சனிக்கிழமை) – ரம்ஜான் பண்டிகை,

மார்ச் 31 (செவ்வாய் கிழமை) – மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 3 (வெள்ளிக் கிழமை) – புனித வெள்ளி,

ஏப்ரல் 14 (செவ்வாய் கிழமை) – தமிழ் புத்தாண்டு

மே 1 (வெள்ளிக் கிழமை) – தொழிலாளர் தினம்

மே 28 (வியாழக் கிழமை) – பக்ரீத் பண்டிகை

ஜூன் 26 (வெள்ளிக் கிழமை) – மொஹரம் பண்டிகை,

ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை) – சுதந்திர தினம்

ஆகஸ்ட் 26 (புதன் கிழமை) – மிலாடி நபி,

செப்டம்பர் 4 (வெள்ளிக் கிழமை) – கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 14 (திங்கள் கிழமை) – விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2 (வெள்ளிக் கிழமை) – காந்தி ஜெயந்தி, விஜயதசமி,

அக்டோபர் 19 (திங்கள் கிழமை) – ஆயுத பூஜை,

அக்டோபர் 20 (செவ்வாக் கிழமை) – விஜயதசமி,

நவம்பர் 8 (ஞாயிற்றுக் கிழமை) – தீபாவளி பண்டிகை

டிசம்பர் 25 (வெள்ளிக் கிழமை) – கிறிஸ்துமஸ் என மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.