‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ - முதல்வர் நிதிஷ் குமார்

‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ - முதல்வர் நிதிஷ் குமார்

‘‘பிஹாரில் எனது சொந்த குடும்​பத்​துக்​காக, நான் எதை​யும் செய்​ய​வில்​லை’’ என்று முதல்​வர் நிதிஷ்கு​மார் வீடியோ​வில் தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் தேர்​தல் வரும் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடக்​கிறது. இந்​நிலை​யில், ஆளும் என்​டிஏ கூட்​ட​ணிக்​கும், ஆர்​ஜேடி - காங்​கிரஸ் தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடை​யில் பலத்த போட்டி நில​வு​கிறது. இரண்டு கூட்​ட​ணி​களும் தங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் பல்​வேறு திட்​டங்​களை அறி​வித்​துள்​ளன. இந்​நிலை​யில், என்​டிஏ கூட்​டணி சார்​பில் முதல்​வர் நிதிஷ் குமார் நேற்று வெளி​யிட்ட வீடியோ​வில் வாக்​காளர்​களிடம் உருக்​க​மாக பேசி​யுள்​ளார். அதில் நிதிஷ் கூறி​யிருப்​ப​தாவது:

எனதருமை பிஹார் சகோ​தர, சகோ​தரி​களே… கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிஹார் மக்​களுக்கு சேவை செய்ய எனக்கு ஆதரவு அளித்து வரு​கிறீர்​கள். அப்​போது பிஹார் இருந்த நிலைமை முற்​றி​லும் மோச​மாக இருந்​தது. அப்​போது பிஹாரி​யாக இருப்​பது மிக​வும் அவமான​மாக இருந்​தது. ஆனால், உங்​கள் ஆதர​வுடன் கடந்த 2005-ம் ஆண்​டில் இருந்து இரவு பகலாக நேர்​மை​யுடன் செய​லாற்றி வரு​கிறோம். கடின​மாக உழைத்து வரு​கிறோம். பிஹாரில் ஆட்சி பொறுப்​பேற்​ற​தில் இருந்து பல்​வேறு பிரச்​சினை​களுக்கு தீர்வு காண திட்​ட​மிட்​டோம்.

கல்​வி, சுகா​தா​ரம், வேளாண்​மை, இளைஞர்​கள் நலன் போன்ற அனைத்து துறை​களை​யும் மேம்​படுத்த வேண்​டி​யிருந்​தது. அவற்றை எல்​லாம் ஒவ்​வொன்​றாக சரி செய்​தோம். தற்​போது கல்​வி, சுகா​தா​ரம், சாலைகள், மின்​சார வசதி, குடிநீர் வசதி, வேளாண் முன்​னேற்​றம், இளைஞர்​களின் முன்​னேற்​றம் போன்​றவை மேம்​பட்​டுள்​ளன.

முன்​னாள் முதல்​வர் லாலு ஆட்சிக் காலத்​தில் பிஹார் மக்​களுக்கு எது​வும் நடை​பெற​வில்​லை. குடும்ப அரசி​யலை மட்​டுமே அவர் முன்​னிறுத்​தி​னார். தனது குடும்​பத்​தினரின் முன்​னேற்​றத்​தில் மட்​டுமே அவர் கவனம் செலுத்​தி​னார்.

பெண்​களின் முன்​னேற்​றத்​துக்கு லாலு ஆட்​சி​யில் ஒன்​றும் செய்​ய​வில்​லை. ஆனால், தற்​போது பெண்​களை நாங்​கள் வலிமை​யுள்​ளவர்​களாக மாற்றி இருக்​கிறோம். இனி அவர்​கள் வேறு யாரை​யும் சார்ந்​திருக்க வேண்​டிய நிலை இல்​லை. அவர்​கள் தற்​போது தங்​கள் குடும்​பத்​துக்​காக, பிள்​ளை​களின் வளர்ச்​சிக்​காக அனைத்து வேலைகளை​யும் செய்ய முடி​யும். அனைத்து சமூகத்​தவரின் நலனுக்​காக இந்த அரசு உழைத்து வரு​கிறது.

நாங்கள் அனைத்து தரப்​பினரின் வளர்ச்​சிக்​காக​வும் நேர்​மை​யாக​வும், கடுமை​யாக​வும் பாடு​பட்டு வரு​கிறோம். எங்​கள் குடும்​பத்​துக்​காக நாங்​கள் எதை​யும் செய்து கொள்​ள​வில்​லை. இப்​போது பிஹாரி என்று சொல்​வ​தில் அவமானமில்​லை. மதிப்​பாக இருக்​கிறது.

பிரதமர் மோடி​யின் ஆதர​வுடன் பிஹார் மாநிலம் மிகப்​பெரிய அளவில் முன்​னேற்​றம் கண்​டுள்​ளது. எனவே, உங்​களை வேண்​டு​வது எல்​லாம் ஒன்​று​தான். வரும் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் நடை​பெறும் தேர்​தலில் பிஹார் வாக்​காளர்​கள் அனை​வரும் என்​டிஏ கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு வாக்​களிக்க வேண்​டும். உங்​களுக்​காக சேவை செய்ய மீண்​டும் ஒரு வாய்ப்​பளிக்க வேண்​டும். அப்​போது​தான் இன்​னும் நிறைய திட்​டங்​களை நிறைவேற்ற முடி​யும். ஜெய் ஹிந்த், ஜெய் பிஹார். இவ்​வாறு முதல்​வர்​ நிதிஷ்கு​மார் வீடியோ​வில்​ பேசியுள்​ளார்​.