செங்கோட்டையன் போன்று மேலும் சிலர் தவெக-வுக்கு வருவார்கள்... விஜய் தகவல்

செங்கோட்டையன் போன்று மேலும் சிலர் தவெக-வுக்கு வருவார்கள்... விஜய் தகவல்
அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் பெயரை தவெக பயன்படுத்தக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் முதன்முறையாக பொதுவெளியில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் பேசிய அவர், ஈரோட்டின் சிறப்புகளான மஞ்சள், காலிங்கராயன் அணை குறித்து நினைவுக் கூர்ந்தார். மேலும் பெரியாரை இரும்பு மனிதர் என்று புகழ்ந்த விஜய், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் சொத்து என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே எதிர்ப்பேன் என்றும் கூறினார்.
காஞ்சிபுரத்தில் தான் கூறிய வாக்குறுதிகளை தவறாக புரிந்துக் கொண்டு அவதூறு பரப்புவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை, தான் மீண்டும் கூறுவதாக தெரிவித்த விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய், செங்கோட்டையன் போன்று மேலும் சிலர் தவெக-வுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.