புலம்பிய ரசிகர்களுக்கு குட்நியூஸ்! 14ம் தேதி ரிலீசாகும் விஜய்யின் படம் ! என்னாவா இருக்கும் ??

புலம்பிய ரசிகர்களுக்கு குட்நியூஸ்! 14ம் தேதி ரிலீசாகும் விஜய்யின் படம் ! என்னாவா இருக்கும் ??

சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் சோகத்தில் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்  ஒரு அறிவிப்பு வந்துள்ளது. என்னவென்று தானே நினைக்கிறீர்கள் ! ஆம் விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

அப்படத்தின் தயாரிப்பாளரான 'கலைப்புலி' தாணு. இக்கட்டான நிலையில் இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  அரசியல் பின்னணியைக் கொண்டதாக பேசப்படும் இந்த படம், ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையால் அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், பொங்கல் வெளியீடும் கேள்விக்குறியாகியுள்ளது.

'ஜனநாயகன்' பொங்கலுக்கு வெளியாகுமா இல்லையா? முடிவு உச்ச நீதிமன்றம் கையில்! ரேஸில் குதித்த 4 படங்கள்! சென்சார் சன்றிதழ் ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். வசதவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி வாயிலாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

படத் தயாரிப்பு குழு தரப்பின் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹதகி மற்றும் சதீஷ் பராசரன் வாதிட்டனர். 

நீதிமன்றம் தடை இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே படம் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாக வேண்டும் என நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரக் கூடாது என்றும், தணிக்கை வாரியத்திற்கு பதிலளிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, நீதிபதிகள் 'ஜனநாயகன்' படத்தை ஜனவரி 21-ம் தேதி வரை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர். பொங்கல் 2026 விஜய் படம் இந்த உத்தரவால், 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். விஜய்க்கு ஆதரவாக பல நடிகர்களும் இந்தப் பொங்கலை கொண்டாடப் போவதில்லை எனவும், ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாள்தான் தங்களுக்கு பொங்கல் என கூறி வந்தனர்.

இந்த நிலையில் ஜனநாயகம் ரிலீஸ் ஆகாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் நெருக்கடி உருவானது

தெறி ரீ ரிலீஸ் அதாவது ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகாததால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். பராசக்தியை வெளியிட முயன்றும் அந்த நிறுவனம் அவர்களுக்கு படத்தை தரவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் ரசிகர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக விஜய் நடித்த தெறி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளரான தலைப்புலி தானு. ஏற்கனவே விஜய் நடித்த கில்லி, சச்சின் திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இதனை தியேட்டர் உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர்.