இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகி வரும் ”வா வாத்தியார் ‘

இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகி வரும் ”வா வாத்தியார் ‘

ஓடிடி வெளியீட்டுக்கு பின்பும் ’வா வாத்தியார்’ படம் தொடர்ச்சியாக இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘வா வாத்தியார்’. ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதன் காட்சியமைப்புகள், பாடல்கள் என எதுவுமே பார்வையாளர்களிடம் எடுபடவில்லை. ‘கங்குவா’ படத்துக்கு பின்பு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு மற்றொரு தோல்வி படமாக அமைந்தது.

மேலும், 4 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் படத்தினை வெளியிடுவார்கள். ஆனால், எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் 2 வாரங்களிலேயே ‘வா வாத்தியார்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டு, அங்கும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த்ராஜ், கருணாகரன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்த படம் ‘வா வாத்தியார்’. பல மாதங்கள் தயாரிப்பில் இருந்தாலும், இந்த தோல்வி படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ‘சர்தார் 2’ வெளியாகவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை.