வங்கதேசத்தில் வரும் காலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை
வங்க தேசத்தில் வெள்ளிக்கிழமை காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவானது.
தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் மத்திய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 10 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனிக்கிழமையும் 3 முறை லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.
தி டெய்லி ஸ்டார் நேற்று வெளியிட்ட செய்தியில், “நிலநடுக்கத்தில் 14 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதை டாக்கா மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
