சென்னை மாநகராட்சி சார்பில் 3,000 செல்லப் பிராணிகளுக்கு ஒரே நாளில் மைக்ரோ சிப் பொருத்தம்

சென்னை மாநகராட்சி சார்பில் 3,000 செல்லப் பிராணிகளுக்கு ஒரே நாளில் மைக்ரோ சிப் பொருத்தம்

சென்னை மாநக​ராட்சி சார்​பில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 91 செல்​லப் பிராணி​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

வீடு​களில் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் பெறு​வதை சென்னை மாநக​ராட்சி கட்​டாய​மாக்​கி​யுள்​ளது. உரிமம் பெறா​விட்​டால் வரும் நவ.24-ம் தேதி முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என அறி​வித்​துள்​ளது. மேலும் கடந்த ஒரு மாத​மாக செல்​லப் பிராணி​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​துதல், நாய்​களின் உரிமை​யாளர்​கள் அவற்றை பல்​வேறு காரணங்​களுக்​காக பராமரிக்​காமல் தெரு​வில் விடு​வதைத் தடுக்​க​வும், செல்​லப் பிராணி​களுக்கு முறை​யாக தடுப்​பூசிகள் செலுத்​தப்​பட்டு வரு​கிறதா என்​பதை கண்​காணிக்​க​வும் மைக்ரோ சிப்பை இலவச​மாகப் பொருத்தி வரு​கிறது.

33,418 செல்​லப் பிராணி​களுக்கு... இது​வரை 77,707 செல்​லப் பிராணி​கள் பதிவு செய்​யப்​பட்​டு, அதில் 33,418 செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக மாநக​ராட்சி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.