மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 ஜனவரி 2026

மேஷம்: அலைச்சலுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் யாரிடமும் கோபப்பட்டு பேசாதீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் இருக்கும். அதனால் ஆதாயமும் உண்டு. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

ரிஷபம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உடனான மனக் கசப்புகள் நீங்கும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொருட்கள் சேரும்.

கடகம்: உங்கள் பேச்சில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதியவர்களுடன் நட்பு மலரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனப் பழுது நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.

கன்னி: தேவையற்ற அச்சம், கவலை, குழப்பங்கள் வந்துபோகும். எக்காரியத்திலும் நிதானம் தேவை. யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பது சற்று தாமதமாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து உறவாடுவார்கள்.

விருச்சிகம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் சலசலப்புகள் ஓய்ந்து, மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். பெரியவர்கள், மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

தனுசு: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும். திடீர் பயணத்தால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

கும்பம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் கவுரவம் கூடும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. எதிலும் நிதானம் அவசியம்.

மீனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினர், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.