எங்கே நிம்மதி?

அனைவரும் தேடிக் கொண்டு இருந்தாலும், யாரிடமும் அகப்பட்டு விடாமல் ஓடிக்கொண்டே இருப்பது தான் அந்த நிம்மதி.
எங்கு கிடைக்கும், எப்படி கிடைக்கும், யாரால் கிடைக்கும் என்று எதுவுமே தெரியாமல் எல்லோரும் தேடுகின்ற ஒன்றுதான் நிம்மதி.
எங்கெங்கோ தேடித் தேடி அலைந்து களைத்துப் போய், இறுதியில் அசதி ஏற்பட்டு அமர்ந்த பொழுதினில் யதார்த்தமாய் நமக்கு அருகினிலேயே ஒய்யாரமாய் இருக்கும் பொருளாய் இருக்கிறது அந்த நிம்மதி.
அது நம்மிடம் இருந்து கிடைக்கும் மன அமைதி தான். ஆக, மனதை அமைதியாய் வைத்திருக்க கற்றுக் கொள்வோம். ஏனென்றால், மன அமைதி தான் நாம் தேடி அலையும் நிம்மதி.
நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் உயர்ந்த எண்ணம் மனதில் வந்து விட்டால், மன அமைதி தானாக வந்துவிடும். மன அமைதி கிடைத்து விட்டால் நிம்மதியும் கிடைத்து விடும்.
ஆசைகள் மனிதனை வாழ விடுவதில்லை. மனிதன் ஆசைகளை சாகவிடுவதில்லை.
தேவையில்லாத ஆசைகளை மனதில் விதையாய் விதைத்தால், கஷ்டமும், வேதனையும் வெட்ட முடியாத மரமாக வளர்ந்து நிற்கும்.
தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், ஆசைப்பட்ட பிறகு அதை அடைய தன் தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதே தவறு.
நீங்கள் தேவையில்லை என்று சிலர் ஆசைபடும் முன்பே அவர்களை விட்டு விலகி நிற்க கற்றுக்கொள்வது மிகச்சிறந்தது.
"மனம் அமைதி அடையும்போது, இந்த உலகம் அழகாகக் காட்சியளிக்கும். உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும்போது, ஒரு சாதாரண விஷயம்கூட அற்புதமானதாகத் தெரியும். உங்கள் மனப்பான்மையை மாற்றினால், வாழ்க்கை அழகாகும்.