‘ஜெயிலர் 2’ வில் களமிறங்கும் பிரபல நடிகை.. யார் இவர் தெரியுமா?
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியிருந்தார் தமன்னா. இந்தப் பாடலும், தமன்னாவின் நடனமும் பெரிய அளவில் ஹிட்டாகி வரவேற்பை பெற்றது. இன்றும் பலருக்கும் இந்தப் பாடல் ஃபேவரைட்.
அதேபோன்றதொரு பாடலை ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெற வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இந்தப் பாடலுக்கு நடனமாட பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியை படக்குழுவினர் நாடியுள்ளனர். அவரும் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டாராம். விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
நோரா ஃபதேஹியை பொறுத்தவரை, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘காஞ்சனா 4’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இதில் நடிப்பார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும் நடிக்கலாம் என பல தகவல்கள் பரவுகின்றன. இந்நிலையில் தற்போது நோரா ஃபதேஹி நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.