டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை... ஜார்கண்ட் அணி அசத்தல்

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை... ஜார்கண்ட் அணி அசத்தல்

டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற சாதனையை ஜார்கண்ட் அணி படைத்துள்ளது.

சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் ஹரியானா அணியும், ஜார்கண்ட் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இசான் கிசன் 101 ரன்களை விளாசினார்.

இதுவே டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஒரு அணி குவிக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதன்மூலம் ஜார்கண்ட் அணி புதிய வரலாற்று சாதனையை படைத்தது.

இதற்கு முன்பு, ரோமானியா அணிக்கு எதிராக இத்தாலி அணி கடந்த 2024ம் ஆண்டில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்களை எடுத்திருந்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜார்கண்ட் அணி விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.