சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம்: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம்: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

 சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக 6 வாரங்​களில் விசா​ரணை அறிக்​கையை சிறப்பு விசா​ரணைக் குழு​வினர் (எஸ்​ஐடி) தாக்​கல் செய்​ய​வேண்​டும் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்​பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்லை என புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கடந்த செப்​டம்​பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது.

இதையடுத்​து, செப்​பனிடும் பணி​களுக்​கான பொறுப்பை ஏற்ற பெங்​களூருவைச் சோ்ந்த தொழில​தி​பர் உன்னிகிருஷ்ணன் போற்​றி​யிடம் கேரள உயா் நீதி​மன்ற உத்​தர​வின்​படி 2 நாள்​கள் விசா​ரணை நடத்தி திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் வாரி​யம் (டிடிபி) அறிக்கை சமர்ப்​பித்​தது. அதன் பிறகு சபரிமலை​யில் உள்ள பொருள்​களை​யும் மதிப்​பீடு செய்ய உயர் நீதி​மன்​றம் குழு அமைத்​தது.

இதனிடையே தங்க முலாம் பூசப்​பட்ட பீடத்தை தேடி கண்​டு​பிடிக்க ஐயப்​பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்​புப் பிரிவு அதி​காரி​களுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்​திய விசா​ரணை​யில், தங்க முலாம் பூசப்​பட்ட பீடம் மீட்​கப்​பட்​டது. உயர் நீதி​மன்ற விசா​ரணை​யில் துவார பால​கர் சிலைகளின் மேல் பூசப்​பட்​டிருந்த தங்க முலாம் காணா​மல் போயிருப்​பது தெரிய​வந்​தது. மொத்​தம் 4 கிலோ தங்​கம் மாய​மாகி இருக்​கிறது. இதுதொடர்​பாக சிறப்பு விசா​ரணைக்​குழு(எஸ்​ஐடி) விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பான வழக்கு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் ராஜா விஜய​ராகவன், கே.​வி. ஜெயக்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: சிறப்பு விசா​ரணைக் குழு​வினர், தங்​கம் திருடப்​பட்ட விவ​காரத்​தில் விசா​ரணை நடத்தி அடுத்த 6 வாரங்​களுக்​குள் அறிக்​கை​யைத் தாக்​கல் செய்​ய​ வேண்​டும். மேலும், துவார​பால​கர்​கள் சிலை தொடர்​பான அனைத்து ஆவணங்​களும் நீதி​மன்​றத்​துக்கு கொண்டு வரப்பட வேண்​டும். இவ்​​வாறு நீதிபதிகள்​ தெரிவித்​தனர்​.