முந்திரி, பாதாம், பிஸ்தா தின்று வளர்ந்த எருமை மாட்டின் விலை ரூ.8 கோடி

முந்திரி, பாதாம், பிஸ்தா தின்று வளர்ந்த எருமை மாட்டின் விலை ரூ.8 கோடி

உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது.

இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு காட்​சிக்கு வைத்​துள்​ளார். மீரட் சந்​தை​யில் இந்த ஹரி​யானா மாநில எரு​மைக்கு ரூ.8 கோடி விலை வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதன் உரிமை​யாளர் நரேந்​திரசிங் தன் எரு​மையை விற்​பனை செய்ய விருப்​பம் இல்லை எனத் தெரி​வித்​துள்​ளார். அந்த எரு​மைக்கு ‘எம்​எல்ஏ’ என அதன் உரிமை​யாளர் பெயர்​சூட்​டி​யுள்​ளார்.

இது குறித்து விவ​சாயி நரேந்​திரசிங் கூறுகை​யில், ‘எனது எருமை முர்ரா எனும் உயர்​வகை இனத்​தைச் சேர்ந்​தது. இதற்கு அன்​றாட உணவாக எட்டு லிட்​டர் பால், நெய், முந்​திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை உள்​ளது. கடந்த 2 வருடங்​களாக வட மாநிலங்​களின் எந்த சந்​தைக்கு சென்​றாலும் எனது எம்​எல்​ஏ-​விற்கு சிறப்பு பரிசு கிடைத்து வரு​கிறது.’ என்​றார்.

ஹரி​யானா விவ​சாயி நரேந்​திரசிங் பத்​மஸ்ரீ விருது பெற்​றவர். தனது எரு​மை​யின் உயிரணுவை விற்று அவர் ஒவ்​வொரு ஆண்​டும் லட்​சக்​கணக்​கான ரூபாய்​ வரு​மானம்​ ஈட்​டு​கிறார்​.