கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி

கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி

பிஹார் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி. கூட இல்​லாத கட்​சி​யாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் என்​டிஏ (ஐஜத - பாஜக) கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. மெகா கூட்​டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்​கிரஸ்) படு​தோல்வி அடைந்​தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

இந்த தோல்வி மாநிலங்​களவை தேர்​தலில் ஆர்​ஜேடிக்கு கடுமை​யான பாதிப்பை ஏற்​படுத்த உள்​ளது. வரும் 2030-ம் ஆண்டு பிஹாரில் அடுத்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும். அதற்கு முன்​ன​தாக தற்​போது ஆர்​ஜேடி கட்​சி​யில் உள்ள 5 மாநிலங்​களவை உறுப்​பினர்​களின் பதவிக் கால​மும் முடிந்​து​விடும். அதன்​பிறகு 30 ஆண்டு கட்சி வரலாற்​றில் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி.கூட இல்​லாத கட்​சி​யாக ஆர்​ஜேடி மாறும்.

 ஆர்​ஜேடி​யில் தற்​போது மாநிலங்​களவை எம்​.பி.க்​களாக உள்ள பிரேம் சந்த் குப்தா (ஆர்​ஜேடி மாநிலங்​களவை தலை​வர்), ஏ.டி.சிங் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்​ரல் மாதம் முடிகிறது. பையாஸ் அகமது​வின் பதவிக்​காலம் 2028-ம் ஆண்டு ஜூலை​யில் முடிகிறது. மனோஜ் குமார் ஜா, சஞ்​சய் யாதவ் ஆகிய இரு​வரின் பதவிக் காலம் 2030-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் முடிகிறது.