பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் தேர்​தலில் முதல்​முறை​யாக முன்​னாள் தேர்​தல் வியூக வகுப்​பாளர் பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி போட்​டி​யிடு​கிறது.

இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் நேற்று கூறிய​தாவது: இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்​துள்​ளது. எனவே தேஜஸ்விக்கு எதி​ராக ராகோபூரில் மற்​றொரு வேட்​பாளரை கட்சி அறி​வித்​துள்​ளது. இது கட்​சி​யின் நலனுக்​காக எடுத்த முடிவு. இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிட்​டால், அது கட்​சிப் பணி​களில் இருந்து எனது கவனத்தை திசை திருப்​பும். எனவே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.

இந்த தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) நிச்​ச​யம் தோல்வி அடை​யும். நிதிஷ் குமார் மீண்​டும் முதல்​வ​ராக மாட்​டார். என்​டிஏ கூட்​ட​ணி​யில் கடும் குழப்​பம் நில​வு​கிறது. பாஜக, ஐக்​கிய ஜனதா தளம் போட்​டி​யிடும் தொகு​தி​கள் குறித்து நிச்​சயமற்ற சூழல் உள்​ளது. பிஹார் தேர்​தலில் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெற்​றால், அது நாடு முழு​வதும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும். தேசிய அரசி​யல் வேறு திசை​யில் பயணிக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.