யாசகர்கள் வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை

யாசகர்கள் வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை

யாசகம் செய்ப​வர்​கள் வெளி​நாடு செல்​வதற்கு பாகிஸ்தான் அரசு தடை​வி​தித்​துள்​ளது.

உம்ரா விசாவை தவறாகப் பயன்​படுத்​து​வது பரவலாக உள்​ளது. சமீபத்​தில், சவுதி அரேபி​யா​வில் இந்த விசாவை யாசகம் கேட்க தவறாக பயன்​படுத்​தி​ய​தாக பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகின. இதையடுத்​து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், குடியேற்ற நடை​முறை​களை சீரமைக்​க​ ஒரு குழுவை அமைத்​தார்.

இந்நிலை​யில், யாசகர்​களும், முழு​மையற்ற ஆவணங்​களு​டன் பயணம் செய்​பவர்​களும் வெளி​நாடு செல்ல அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று பாகிஸ்​தானின் உள்​துறை அமைச்​சர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.  சட்​ட​விரோத யாசகம், விசா விதி​மீறல்​கள் மற்​றும் ஆவண மோசடி காரண​மாக வெளி​நாடு​களில் அவமானத்தை சந்​தித்​ததைத் தொடர்ந்து, முழு​மையற்ற பயண ஆவணங்​களைக் கொண்ட பாகிஸ்தான் நாட்​டினரை​யும், யாசகர்​களை​யும் வெளி​நாடு செல்​வதற்கு பாகிஸ்தான் அரசு தடை ​விதித்துள்ளது.

பாகிஸ்​தானுக்கு அவப்​பெயரை ஏற்​படுத்​துபவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரித்த நக்​வி, நாட்​டின் கண்​ணி​யத்தை காப்பது தனது முன்​னுரிமை என்று அமைச்​சர் மொஹ்சின் நக்வி கூறி​யுள்​ளார்.