ரூ.12,000 சம்பளம்.... பிளஸ் 2 படித்திருந்தால் போதும்
அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஒருங்கிணைந்த சேவை மைய பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்திற்காக மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) பிரிவு ICDS திட்டம் என்பது இளம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து பராமரிப்பை வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும். இந்தப் பிரிவு திட்ட அலுவலரால் தலைமை தாங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தற்போது பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு கல்வித்தகுதி பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் 12,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. இந்த பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் 31-ம் தேதிக்குள், விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் செயல்பட்டு வரும் அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.