அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்: ஒருவர் அன்னை தெரசா! மற்றொருவர் யார் தெரியுமா?

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்: ஒருவர் அன்னை தெரசா! மற்றொருவர் யார் தெரியுமா?

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் திங்கள்கிழமை முதல் வெளியாகி வருகிறது.

ஐந்தாம் நாளான இன்று உலகமே எதிர்பார்ந்திருந்த அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுகள் 1895 ஆம் ஆண்டு ஸ்வீடன் வேதியியலாளர் மற்றும் தொழிலதிபரான ஆல்ஃபிரட் நோபெலின் (Alfred Nobel) உயில் மூலம் நிறுவப்பட்டன.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்:

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் இருவர்:

அன்னை தெரசா: அல்பேனியாவில் பிறந்து இந்தியக் குடியுரிமை பெற்ற அன்னை தெரசா, ஏழைகள் மற்றும் நோயுற்றவர்களுக்காக ஆற்றிய மனிதநேயப் பணிகளுக்காக 1979ம் ஆண்டு அன்னை தெரசா (Mother Teresa) அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.

கைலாஷ் சத்யார்த்தி: குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காகப் பாடுபட்டதற்காக 2014ம் ஆண்டு கைலாஷ் சத்யார்த்தி (Kailash Satyarthi) இந்தப் பரிசைப் பெற்றார். இந்தப் பரிசை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் உடன் பகிர்ந்து கொண்டார்.