சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்- முதலிடத்தை பிடித்த ஜாம்பவான் வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்- முதலிடத்தை பிடித்த ஜாம்பவான் வீரர்

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீரர்கள் சாதனைகளை படைப்பதும், அதனை முறியடிப்பதும் இயல்பானது. இதில் சிறப்பான சாதனைகள், மோசமான சாதனைகளும் அடக்கம். அப்படி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் ஜாம்பவானுடைய பெயர் முதலிடத்தில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதிலும் குறிப்பாக அவர் அதிக முறை டக் அவுட்டானது, தனது பெயரில் ஒரு உலக சாதனையைப் படைத்துள்ளார் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும், எவ்வளவு சிறந்த வீரராக இருந்தாலும், ஒரு முறையாவது டக் அவுட் ஆவது இயற்கையானது. அப்படி பார்த்தோமேயானால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் 10 அல்லது 20 முறை டக் அவுட் ஆவது கூட வழக்கமான ஒன்று என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாம் பார்க்க இருக்கும் வீரர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 59 முறை டக் அவுட்டாகியுள்ளார். இவ்வாறான மோசமான சாதனையை படைத்தது வேறு யாருமல்ல, கிரிக்கெட் உலகம் கண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தான்.

ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 33 முறையும், ஒருநாள் போட்டிகளில் 25 முறையும் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு முறையும் என மொத்தமாக 59 முறை டக் அவுட்டாகி, பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.