ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகள் - ஜாம்பவான்கள் வரிசையில் மிட்செல் ஸ்டார்க்!

ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகள் - ஜாம்பவான்கள் வரிசையில் மிட்செல் ஸ்டார்க்!

ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரானது இன்று கோலாகலமாக தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலிருந்தே தடுமாறிய ஜாக் கிரௌலின் முதல் ஓவரின் கடைசி பந்தில் உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 39 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஆலி போப் - ஹாரி ப்ரூக் இணை நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய ஆலி போப் 46 ரன்களில் நடையைக் கட்ட, இங்கிலாந்து அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 105 ரன்களை எடுத்தது.

இதுதவிர, ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 21வது பந்துவீச்சாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் 11ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே 195 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, ஜேக் வெதர்லாட், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், பிராண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர்.