‘ஹேண்​டில் தி பால்’ - எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது என்ன?

‘ஹேண்​டில் தி பால்’ - எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது என்ன?

கிரிக்​கெட் விளை​யாட்​டுக்​கான விதிமுறைகளை உரு​வாக்​குவது இங்​கிலாந்​​திலுள்ள மெரில்​​போன் கிரிக்​கெட் கிளப் எனப்​படும் எம்​சிசி ஆகும். எம்​சிசி உரு​வாக்​கி​யுள்ள கிரிக்​கெட் விதிமுறை புத்​தகத்​​தில் 33-வது விதி​யாக இருப்​பது ‘ஹேண்​டில் தி பால்’ விதிமுறை​யாகும்.

எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது இது​தான். ‘ஹேண்​டில் தி பால்’ அல்​லது பந்​தைக் கையாள்​வது என்ற விதி​யின்​படி பேட்​ஸ்​மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்​கலாம். அதாவது, களத்​​தில் பந்​துவீச்​சாளர் பந்தை வீசிய பின்​னர் பேட்​ஸ்​மேன் வேண்​டுமென்றே தனது ஒரு கை அல்​லது இரண்டு கைகளால் கிரிக்​கெட் மட்​டையைப் பிடிக்​காமல் பந்​தைத் தொட்​டால், பந்​தைக் கையாண்​ட​தாக அர்​த்​த​மாகும்.

அதாவது பந்​தை, கிரிக்​கெட் பேட்​டால் தடுக்​காமல் பந்தை வேண்​டுமென்றே தடுப்​பது​தான் “ஹேண்​டில் தி பால்” விதிமுறை​யாகும். இதற்கு நடுவர் அவுட் கொடுக்​கலாம்.

ஒருவேளை வீசப்​பட்ட பந்​தால், காயம் ஏற்​படுவதைத் தவிர்​க்க பேட்​ஸ்​மேன் பந்​தைக் கையாண்​டால் அவர் ஆட்​டமிழக்​காமல் இருப்​ப​தாக முடிவு செய்​யப்​படும். இந்த ‘ஹேண்​டில் தி பால்’ முறை​யில் பேட்​ஸ்​மேன் ஆட்​டமிழந்​தால் அந்த விக்​கெட் பந்து வீச்​சாளர் கணக்​கில் சேராது.

‘ஹேண்​டில் தி பால்’ விதிமுறை​யால் ஆட்​டமிழந்த முதல் வீர​ராக தென் ஆப்​பிரிக்​காவைச் சேர்​ந்த ரஸ்​ஸல் என்​டீன் உள்​ளார். 1957-ம் ஆண்டு இங்​கிலாந்​துக்கு எதி​ராக கேப்​டவுனில் நடைபெற்ற போட்​டி​யில் ரஸ்​ஸல் என்​டீன், இந்த விதிமுறை​யின் கீழ் அவுட்​டா​னார்.

இந்த விதிமுறை​யின் கீழ் இதுவரை 10 வீரர்​கள் ஆட்​டமிழந்​துள்​ளனர். இந்​​தி​யா​வில் 3 மைதானங்​களில் நடைபெற்ற போட்​டிகளில் ‘ஹேண்​டில் தி பால்’ முறை​யில் 3 வீரர்​கள் ஆட்​டமிழந்​துள்​ளார். சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​​தில் 2001-ம் ஆண்​டில் நடைபெற்ற இந்​​தி​யாவுக்கு எதி​ரான போட்​டி​யில் ஆஸ்​​திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் இந்த விதி​யின் கீழ் ஆட்​டமிழந்​தார். ஹர்​பஜன் சிங் வீசிய பந்​தை, ஸ்டீவ் வாஹ் முதலில் மட்​டை​யால் தடுத்​தார். அதன் பின்​னர் கீழே விழுந்த பந்து ஸ்டம்பை நோக்​கிப் போக, அனிச்​சை​யாக அதை கையால் தடுத்​து​விட்​டார் ஸ்டீவ் வாஹ். இந்​​திய வீரர்​கள் ‘ஹேண்​டில் தி பால்’ முறை​யில் அவுட் கேட்க பரி​தாப​மாக ஆட்​டமிழந்​தார் ஸ்டீவ் வாஹ். இந்த டெஸ்ட் போட்டியில் இந்​​திய அணி 2 விக்​கெட்​கள் வித்​​தி​யாசத்​​தில் வெற்றி பெற்​றது நினை​விருக்​கலாம்.

கடைசி​யாக 2015-ம் ஆண்​டில் ஜிம்​பாப்​வே, ஆப்​கானிஸ்​தானுக்கு இடை​யிலான போட்​டி​யின்​​போது ஜிம்​பாப்வே வீரர் சமு சி​பாபா ‘ஹேண்​டில் தி ​பால்’ ​வி​திமுறை​யால் ஆட்​டமிழந்​தார்​.