லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்: அல்லு அர்ஜுன் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்: அல்லு அர்ஜுன் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

ரஜினி​யின் கூலி படத்தை இயக்​கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து ‘கைதி 2’ படத்தை இயக்க இருந்​தார். இதற்கிடையே ரஜினி- கமல் இணை​யும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்​குக் கிடைத்​தது. அவர்​கள் ஆக்ஷன் இல்​லாத, நகைச்​சுவை கலந்த குடும்ப கதையை எதிர்​பார்த்​த​தால், அப்​படத்​திலிருந்து வில​கி​னார் லோகேஷ்.

நடிகர் கார்த்தி மற்ற படங்​களில் பிசி​யாக இருப்​ப​தால் ‘கைதி 2’ படத்தை இப்​போது அவர் இயக்​க​வில்​லை. இந்நிலை​யில் அல்லு அர்​ஜுன் நடிக்​கும் படத்தை இயக்க இருக்​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்​கிறது.

அதற்​குள் அட்லி இயக்​கும் படத்​தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதை முடித்​து​விடு​வார் என்​கிறார்​கள். இதற்​கிடையே பான் இந்​தியா முறை​யில் உரு​வாகும் இப்​படத்​தில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நாயகி​யாக நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​ கிறது. இப்​படத்துக்கு அனிருத் இசையமைக்​கிறார்.