BREAKING: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக, 3 மாவட்டங்களில் இன்று (டிச.3) பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஸ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.