‘பராசக்தி’யில் ரவி மோகனைத் தாண்டி எதுவுமே இல்லை ’ -கெனிஷா கருத்து

‘பராசக்தி’யில் ரவி மோகனைத் தாண்டி எதுவுமே இல்லை ’ -கெனிஷா கருத்து

“‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் ஒன்” என்று அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.

சென்னை - காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் வந்திருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது, “அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன... அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். என் கண்ணுக்கு அவரை தவிர வேறு யாரும் தெரியவில்லை.

இந்தப் படத்தை பார்க்கும்போது அவருக்காகவே பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ‘பராசக்தி’ படத்தில் அவர்தான் நம்பர் ஒன். முதல் பாதியில் அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 2-ம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என தெரிந்துவிடும்” என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.