10 ஆண்டுகளில் 468 பாஸ்போர்ட் சேவா மையங்கள் திறப்பு: ஜெய்சங்கர்

10 ஆண்டுகளில் 468 பாஸ்போர்ட் சேவா மையங்கள் திறப்பு: ஜெய்சங்கர்

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 468 பாஸ்போர்ட் சேவா மையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் India's World Annual Conclave 2025 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றியதாவது:

10 ஆண்டுக்கு முன்பு நாட்டில் 77 பாஸ்போர்ட் சேவா மையங்கள் மட்டுமே இருந்தன. அங்கு மட்டுமே சென்று பாஸ்போர்ட்டுக்கு மக்கள் விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது, கடந்த 10 ஆண்டுகளில் 468 பாஸ்போர்ட் சேவை மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

முன்பு பாஸ்போர்ட் வாங்குவது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தற்போது அது எளிதாகி விட்டது. பாஸ்போர்ட் குறித்து மக்கள் பேசுவதே இல்லை. ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விரைவில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.