தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது

தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது

ஆபரணத் தங்​கத்​தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிந்துள்ளது. 

சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகிறது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்துவரு​கிறது. சில நேரங்​களில் விலை குறைந்​தா​லும், மீண்​டும உயர்ந்து விடு​கிறது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்​து, ரூ.1 லட்​சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்​கப்​பட்டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.30 குறைந்து ரூ.12,800-க்கு விற்​பனை​யானது. 24 காரட் சுத்த தங்​கம் பவுன் ரூ.1 லட்​சத்து 11 ஆயிரத்து 704-க்கு விற்​கப்​பட்​டது. அதே​நேரத்​தில், வெள்ளி கிரா​முக்கு ரூ.6 உயர்ந்​து, ரூ.277-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்​சத்து 77 ஆயிரத்​துக்​கும் விற்​பனை செய்​யப்​பட்​டது.

இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 12 , ஆயிரத்து 750 ரூபாய்க்கும் , சவரனுக்கு 400 குறைந்து 1 லட்சத்து 2 ஆயிரமாக விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாயும் கிலோவுக்கு 5 ஆயிரமும் குறைந்து விற்பனையாகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.