வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: ராக்கெட் வேகத்துல ஏறுதே!

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: ராக்கெட் வேகத்துல ஏறுதே!

கடந்த 6 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலை, இன்றும் அதிரடியாக சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,04,000-க்கும், கிராம் ரூ.13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.12,890-க்கும், சவரன் ரூ.560 அதிகரித்து ரூ.1,03,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 அதிகரித்து வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.13,000-க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.14,182-க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,13,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆம் தேதி சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை 6 நாட்களில் ரூ.4,800 அதிகரித்து இன்று ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தை தொட்டு நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

வெள்ளி விலை

வரலாற்றில் முதன்முறையாக வெள்ளி விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து ரூ.2,57,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.254-க்கும், கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.1 அல்லது2 என அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 10, 20 என அதிரடியாக உயர்வை சந்தித்து வருகிறது.

டிசம்பர் 23 ஆம் தேதி கிராம் ரூ.234-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி 4 நாட்களில் ரூ.40 அதிகரித்து இன்று ஒரு கிராம் ரூ.274-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வால், சாமானிய மக்கள் வெள்ளிகூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் நகை கடை பக்கம்கூட செல்ல முடியாத சூழல் உருவாகும்.

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.13,000

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,04,000

வெள்ளி 1 கிராம் - ரூ.274

வெள்ளி 1 கிலோ - ரூ.2,74,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதி கிராம் விலை (ரூ.) சவரன் விலை (ரூ.)
டிசம்பர் 27 ரூ.13,000 ரூ.1,04,000
டிசம்பர் 26 ரூ.12,890 ரூ.1,03,120
டிசம்பர் 25 ரூ.12,820 ரூ.102,560
டிசம்பர் 24 ரூ.12,800 ரூ.1,02,400
டிசம்பர் 23 ரூ.12,770 ரூ.1,02,160
டிசம்பர் 22 ரூ.12,570 ரூ.1,00,560
டிசம்பர் 21 ரூ.12,400 ரூ. 99,200
டிசம்பர் 20 ரூ.12,400 ரூ. 99,200
டிசம்பர் 19 ரூ.12,380 ரூ.99,040
டிசம்பர் 18 ரூ.12,440 ரூ.99,040

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தங்கம், வெள்ளி விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக கவனம் செலுத்துவதால் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.