தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. 

  அதன்படி, 22ct, தங்கத்தின் விலை ஒருகிராம் பனிரெண்டு ஆயிரத்து 870 க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூபாய், ஒரு லட்சத்து , 2 ஆயிரத்து 920 ஆக விற்பனை ஆகிறது. 

புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில் , அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் , கடந்த 6 நாட்களில் மட்டும் , சவரனுக்கு ரூபாய் 3440 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.