தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு
சென்னையில் இன்று (ஜனவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கு மவுசு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 271 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.